சோலியை முடித்த சுயேட்சைகள்... ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ் - குழப்பத்தின் உச்சத்தில் ஹரியானா?

Update: 2024-05-09 13:19 GMT

அரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறியிருக்கும் துஷ்யந்த் சவுதாலா, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரியானாவில் பாஜக அரசுக்கு வழங்கிய ஆதரவை 3 சுயேட்சைகள் வாபஸ் பெற்றனர். மாநில சட்டப்பேரவையில் 2 இடங்கள் காலியாக இருக்க, பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவசியமாகும். இப்போது பாஜக அரசுக்கான ஆதரவு 43 ஆக சரிந்துள்ளதால், பெரும்பான்மையை இழந்துள்ளது. அங்கு பாஜக அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதுபோல், மார்ச் மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய 10 எம்.எல்.ஏ.க்களை கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறியிருக்கும் துஷ்யந்த் சவுதாலா, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்