மீண்டும் சூடுபிடிக்கும் முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-12-01 14:48 GMT
  • அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மேல்முறை​யீட்டு மனு மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த 2001- 2006-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் டிசம்பர் 4-ஆம் தேதி வாதங்களை தொடங்க வளர்மதி தரப்புக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரும் பா.வளர்மதியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்