ஆதவ்வுடன் காங்கிரஸ் புள்ளி சந்திப்பு - மொத்த களத்தின் ஹீட்டையும் எகிறவிட்ட சம்பவம்

Update: 2025-12-24 09:31 GMT

அருமனையில் ஆதவ் அர்ஜுனாவுடன் காங். நிர்வாகி திடீர் சந்திப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜை, காங்கிரஸ் நிர்வாகி சந்தித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்றதால், குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், நிகழ்ச்சி பொறுப்பாளர் பஞ்சு ஸ்டீபன் என்பவரது வீட்டில் ஆதவ் அர்ஜுனாவை காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்