மேடையில் தவறாக முழங்கிய விசிக நிர்வாகி.. மைக்கை சட்டென்று பிடுங்கிய திமுக நிர்வாகி..
100 நாள் வேலை திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு முடக்குவதாக குற்றம் சாட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திமுக மற்றும் விசிக கட்சியினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக மாவட்ட செயலாளர் சக்திவேல் என்பவர், தி.மு.க அரசை கண்டித்து என்று வாய் தவறி முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, அருகில் இருந்த திமுக நிர்வாகி ஒருவர், மைக்கை பறித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.