Erode | Protest | 100 நாள் வேலையில் மாற்றம் - மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலையில் மாற்றம் - மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் டி.என் பாளையத்தில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் சீர்திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்தும், இதற்கு துணை நிற்பதாக அதிமுகவை கண்டித்தும் டி.என் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டி.என் பாளையம் ஒன்றிய செயலாளர்கள் சிவபாலன், சண்முகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில், VG-G RAM G சட்டத்தை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் சிந்து ரவிச்சந்திரன் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள், 100 நாள் வேலை பணியாளர்கள் என ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் அதிமுகவிற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.