தேர்தல் விதிமுறை மாற்றம்-கொதிக்கும் பூர்வ குடி மக்கள் வெடித்த போராட்டம்..கட்டுக்கடங்காத கலவரம்

Update: 2024-05-22 17:55 GMT

பிரஞ்சுக் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் தேர்தல் விதிமுறை மாற்றப்பட்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த மோதல் தீவிரமடைந்துள்ளது... இங்கு பூர்வ குடிகளான கனக் மக்களுக்கும் பிரஞ்சு மக்களுக்கும் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், 10 ஆண்டுகள் நியூ கலிடோனியாவில் வசித்திருந்தால் பிரஞ்சு மக்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என புதிய சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது... இதைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்