6ம் கட்டத் தேர்தல்.. டாப்பில் மே.வங்கம்.. ஷாக் கொடுத்த காஷ்மீரில் - விவரங்களை வெயிட்ட ECI

Update: 2024-05-26 03:27 GMT

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 5 கட்டமாக நடந்த தேர்தல் முடிந்த நிலையில், 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஹரியாணா, பிஹார், டெல்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், மேற்குவங்கத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 61.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 78.19 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 51.41 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்