பிரசாரத்தின் போது நடந்த சுவாரஸ்யங்களை முதல்வரிடம் சொல்லி மகிழ்ந்த வேட்பாளர்கள்

Update: 2024-04-20 10:46 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். பிரச்சாரத்தின் போது தங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அனுபவங்களை முதல்வர் ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, மூன்று பேருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, அனுப்பி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்