"கிட்னி, கல்லீரல் பாதிக்கப்படலாம்" - பிரசாரத்தில் மொத்தமாக உடைந்த கெஜ்ரிவால்

Update: 2024-05-23 06:35 GMT

டெல்லி மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கிய தனக்கு திகார் சிறையில் 15நாட்களாக மருந்து தரமால் இழுத்தடித்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ஆர்.கே. ஆசிரம மார்க்கில் நடந்த ரோடுஷோவில் பேசிய கெஜ்ரிவால், நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 10ஆண்டுகளாக இன்சுலின் ஊசி போட்டு வருவதாகவும், சிறையில் தனக்கு அந்த ஊசிகள் வழங்கவில்லை என்றும் கூறினார். இதனால், தனக்கு சர்க்கரையின் அளவு அதிகமானதால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்