``பேச கூடாதுனு காசு வாங்கிட்டீங்களா?'' - முதல்முறையாக அம்பானி, அதானியை தாக்கிய பிரதமர் மோடி..?

Update: 2024-05-08 10:21 GMT

அதானி அம்பானியை அவதூறு செய்வதை நிறுத்த ராகுல் காந்தி எவ்வளவு பணம் பெற்றார் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்...

vovt

மக்களவைத் தேர்தலையொட்டி தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குடும்பமே முதன்மை என்ற காங்கிரசின் கொள்கை காரணமாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக குற்றம் சாட்டிய பிரதமர், அவருடைய இறப்பிற்கு பின்னரும் அவருடைய உடலை கூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைக்க காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று சாடினார்... மேலும், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டார். ரபேல் விவகாரம் மண்ணை கவ்வியதால் 5 ஆண்டுகளாக எல்லா நேரங்களிலும் 5 தொழிலதிபர்களை மட்டுமே பேசிய ராகுல் காந்தி, தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அம்பானி, அதானி பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும், அவர்களிடம் இருந்து ராகுல் எவ்வளவு பணம் பெற்றார் எனவும் கேள்வி எழுப்பினார். அம்பானி, அதானியுடன் பிரதமர் மோடி நெருக்கமாக இருப்பதாக இதுவரை ராகுல் குற்றம் சாட்டி வந்த நிலையில்

தற்போது முதல் முறையாக அதானி அம்பானியை முன்வைத்து ராகுல் காந்தியின் மீது பிரதமர் மோடி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்