பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சைக்கிளில் வந்த நாராயணசாமி!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரல் சார்பில் பேரணி நடைபெற்றது.;
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரல் சார்பில் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய ஊர்வலத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர். இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக, பேரணியில் கலந்து கொள்வதற்காக நாராயணசாமி சைக்கிளில் வந்துள்ளார்.