"ஊழலை ஒழிப்பதில் நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்" - பிரதமர் மோடி
"ஊழலை ஒழிப்பதில் நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
"ஊழலை ஒழிப்பதில் நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருக்கிறது என்றும், ஊழலுக்கு எதிரான அணுகுமுறை என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.