வாட்ஸ்அப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மோடி அரசு - ராகுல் குற்றச்சாட்டு

வாட்ஸ் அப்பை தனது கட்டுப்பாட்டில் மோடி அரசு வைத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-08-29 13:08 GMT
வாட்ஸ் அப்பை தனது கட்டுப்பாட்டில் மோடி அரசு வைத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்காவின் டைம் இதழில் வெளியான அறிக்கையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து, தொடர்ந்து தவறான மற்றும் வெறுப்பை தூண்ட கூடிய வகையிலான செய்திகளை பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை 40 கோடி மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்க மோடி அரசின் அனுமதி தேவை என்பதால் பாஜகவினர் பரப்பும் தவறான தகவல்களை நீக்க வாட்ஸ்அப் மறுப்பதாக அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்