"காமராஜர், கருணாநிதி பிரதமராவதை தடுத்த இந்தி அரசியல்" - கனிமொழிக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் ஆதரவு

இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-10 13:32 GMT
இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு  கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் பிறந்த  கருணாநிதி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் பிரதமராக கூடிய தகுதியுடன் இருந்து, இந்தி அரசியலால் அவர்கள் பிரதமர் பதவியை அடைய முடியவில்லை என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். அந்த சக்கர வியூகத்தை உடைத்து பிரதமரான ஒரே தென்னிந்திய தலைவர் தேவகவுடா என்றும்,  அவரை ஒரு கன்னடர் என்றே இந்தி அரசியல் விமர்சித்ததாகவும்  குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்