"COVID-19 கொசுக்கள் மூலம் பரவாது" - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா வைரஸ் பரவுதலின் சங்கிலியை உடைப்பதில் சமூக இடைவெளி பயனுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-03-27 05:12 GMT
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர்  லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு அதிகரித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 649 பேர்  கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த லாவ் அகர்வால், 17 மாநிலங்களில்  COVID19-ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து  வருவதாக தெரிவித்தார். COVID19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேநேரத்தில், அவை அதிகரிக்கும் விகிதம் ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருப்பதாக தெரிவதாகவும், இது ஆரம்ப போக்கு மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்