மோடியின் சமூக வலைதள கணக்கை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு - பிரதமர் மோடி முடிவு

பிரதமர் மோடி தமது சமூக வலைதள கணக்கை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளார்.;

Update: 2020-03-03 10:24 GMT
பிரதமர் மோடி, தமது சமூக வலைதள கணக்கை நிர்வகிக்க, பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளார். பெண்கள் தினத்தை முன்னிட்டு, முன்மாதிரியாக இருக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் இந்த வாய்ப்பு வழங்க முடிவு எடுத்துள்ளதாக அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  பல்வேறு துறைகளில் சாதித்து, முன்மாதிரியாக இருக்கும் பெண்கள் she inspires US என்ற ஹேஷ்டேக்கில் அவர்களின் சாதனையை பதிவிடலாம் என்றும், அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு பிரதமர் மோடியின் சமூகவலைதள கணக்கை, பெண்கள் தினத்தன்று, நாள் முழுவதும் நிர்வகிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்