டெல்லி வன்முறையை தூண்டியதாக எழுந்த புகார் - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
டெல்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;
டெல்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக எப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தது.