"முதலமைச்சர் நாராயணசாமி எல்லை மீறுகிறார்" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எல்லை மீறுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2019-12-29 06:15 GMT
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எல்லை மீறுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். கிரண்பேடி மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கிரண்பேடியை திரும்பப்பெறக்கோரி நாராயணசாமி மனு அளித்து இருந்தார். இந்த நிலையில்,  புதுச்சேரிக்கு, கேசினோ சொகுசு கப்பல் கொண்டு வரும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிரண்பேடி,  முதலமைச்சர் நாராயணசாமிக்கு வாட்ஸ்அப் மூலம் பதில் அளித்துள்ளார்.  நாராயணசாமி எல்லை மீறுவதாகவும்,  சட்டத்துக்கும், விதிகளுக்கும் தான் கட்டுப்பட்டவர் என்று கிரண்பேடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்