கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-17 02:04 GMT
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள், சபாநாயகர், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. உணவு இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட்ட வாதத்தில், கர்நாடகா எம் எல் ஏ.க்கள் விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாகவும் எனவே, இரண்டு தரப்புக்கு பாதகமில்லாத உத்தரவை தான் பிறப்பிப்போம் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். அப்போது, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டம் என சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து வாதிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி  தரப்பு வழக்கறிஞர் சபாநாயகர் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் தான் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் இன்று காலை பத்தரை மணிக்கு, தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்