முதன்முறையாக எம்.பி-யான நடிகை நவநீத்

விஜயகாந்த் நடித்த 150ஆவது படமாக அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்த நவநீத் கவுர் ராணா தற்போது நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி-யாக தேர்வாகியுள்ளார்.;

Update: 2019-05-30 05:08 GMT
விஜயகாந்த் நடித்த 150ஆவது படமாக அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்த நவநீத் கவுர் ராணா தற்போது நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி-யாக தேர்வாகியுள்ளார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்க மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நவநீத், இந்த நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் பலர் வெற்றி பெற்று இருப்பதாகவும் அவர்கள் புதிய பார்வையுடன் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்