"தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம்" : அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை
பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பது தொடர்பாகவும் அப்போது ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.