எனக்கு ஏதேனும் நேர்ந்தால் மோடியே பொறுப்பு" - அன்னா ஹசாரே

தமக்கு ஏதாவது நேர்ந்தால், பிரதமர் மோடி தான் காரணம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-03 09:28 GMT
தமக்கு ஏதாவது நேர்ந்தால், பிரதமர் மோடி தான் காரணம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலை தடுத்து நடவடிக்கை எடுக்கும் வகையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் அமைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். மகாராஷ்டிரா மாநிலம் ரலிகான்சித்தி கிராமத்தில் உள்ள தமது வீட்டில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமக்கு ஏதாவது நேர்ந்தால், மக்கள் பிரதமர் மோடியை பிடித்துக்கொள்ள வேண்டும் என அன்னா ஹசாரே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்