"அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம்" - கமல்ஹாசன்
தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அரசியலில் தான் 8 மாத குழந்தை எனவும் ஆனால் தன்னை சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.