ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சாய்பாபா நகரில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என புகார் தெரிவித்த‌தை அடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி ஒப்பந்த‌தார‌ரை அறைய கை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-09-18 06:23 GMT
17 லட்சம் ரூபாய்மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்த‌தை தொடர்ந்து, அமைச்சர் கே.சி.வீரமணி அதனை தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள் கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை என அமைச்சரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் கே.சி. வீர‌மணி, தூர்வாருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அப்போது, ஒப்பந்த‌தார‌ரை அறைய கை ஓங்கியவாறு அமைச்சர் எச்சரித்த‌தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
  
Tags:    

மேலும் செய்திகள்