அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை
பதிவு: செப்டம்பர் 06, 2018, 02:02 AM
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர்  காஞ்சிபுரம் வந்த ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோன்று தி.மு.க. பொருளாளராக பதவியேற்றுள்ள துரைமுருகனும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.