விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன்
பதிவு: செப்டம்பர் 01, 2018, 10:12 PM
விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லையில் டிடிவி தினகரனை சந்தித்த செய்தியாளர்கள், தேர்தலுக்குப்பின் உங்கள் தலைமையிலான அணி காணாமல் போய் விடும் என ஓ. பன்னீர் செல்வம் கூறியிருக்கிறாரே, என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்தபோது டிடிவி தினகரன் கடும் ஆவேசம் காட்டினார்.