2019 தேர்தல் : டெல்லியில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

டெல்லியில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.

Update: 2018-08-27 06:35 GMT
டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில், இந்த  கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற அ.தி.மு.க குழு தலைவர் வேணுகோபால், தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.
இளங்கோவன், தே.மு.தி.க. சார்பில் வழக்கறிஞர்  மணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, வேட்பாளர்கள் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பு நிர்ணயிப்பது, வாக்காளர் பட்டியலின் வெளிப்படை தன்மை, மின்னணு இயந்திரத்தில் உள்ள நிறைகுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தல் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பே, சமூக வலைதளங்கள் பிரசாரம், ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதை தடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்