"வருமான வரி சோதனை;அறிக்கை விவரங்களை வெளியிடுக" - ஸ்டாலின்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்த அறிக்கை விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்த விவரங்கள் அறிக்கையாக தேர்தல் ஆணையத்துக்கும், அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் விவரங்களையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.