"ஆக.15ந் தேதி பாஜகவுக்கு எதிராக புதிய இயக்கம்" - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
பதிவு: ஜூலை 22, 2018, 07:53 AM
மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 1993ம் ஆண்டு இதே நாளில், நிகழ்ந்த கலவரம் ஒன்றில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை ஒட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில், அம்மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எதிராக அணி திரட்டப் போவதாக மம்தா கூறினார். மேலும், அடுத்த மாதம் 15ம் தேதியன்று, 'பாஜகவை அகற்றுவோம்... தேசத்தை பாதுகாப்போம்' என்ற இயக்கத்தை துவங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.