"வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை" - முதலமைச்சர்

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தீகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-15 10:25 GMT
மதுரை காலவாசல் பகுதியில், 54 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சகர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மதுரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், பாலம் கட்டும் பணி உடனடியாக துவங்கப்பட உள்ளது என்றார். மேலும், கோரிபாளையம் பகுதியில், பறக்கும் பாலம் கட்டுவதற்கான நில எடுப்பு பணிகளை, மக்களுக்கு எந்த வித நஷ்டமும் ஏற்பாடாத அளவுக்கு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வைகையாற்றில் கலங்கும் கழிவு நீரை சுத்திகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களுக்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ, அவை எல்லாம் தமது ஆட்சியில் செயல்பாட்டிற்கு வந்து கொண்டு இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்