11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தகுதி நீக்க கோரும் வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக, பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் சக்கரபாணி மேல்முறையீடு செய்தார். இதுபோல, தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, 4 வாரத்திற்குள் சபாநாயகர், பேரவை செயலாளர் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில், 7 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.