"செண்பகத்தோப்பு அணை சீரமைக்க ரூ.34 கோடி நிதி"-அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

செண்பகத்தோப்பு அணை சீரமைக்க 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தெரிவித்தார்.;

Update: 2018-07-09 04:48 GMT
கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர், செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் ஆரணி அருகே கண்ணமங்கலம் மற்றும் குன்னத்துர் ஏரிகால்வாய் சீரமைக்கும் பணியை பார்வையிட வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செண்பகத்தோப்பு அணை சீரமைக்க 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்