முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையி்ல் அனுமதி
முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலோரியாவின் மேற்பார்வையில், சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.