அடுத்த அதிர்ச்சி.. மின்னல் வேகத்தில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்.. பறிபோன 11 உயிர்..

Update: 2024-05-08 04:28 GMT

கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கோழிக்கோட்டில் இரண்டு பேரின் மரணம் வெஸ்ட் நைல் பாதிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்த‌து. இதையடுத்து, அறிகுறியுடன் இருப்பவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், கோழிக்கோட்டில் 4 பேருக்கும், மலப்புரத்தில் 5 பேருக்கும், திருச்சூரில் 2 பேருக்கும் என 11 பேருக்கு, வெஸ்ட் நைல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கியூலெக்ஸ் வகை கொசுக்களால் இந்த மேற்கு நைல் வைரஸ் பரவுவதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்