முதியவரை இடித்து 20 மீ. இழுத்து சென்ற கார்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2024-05-24 14:17 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஜான் சிபிரேம்கஞ்ச் பகுதியில், ரிவர்ஸில் சென்ற கார் 70 வயது முதியவர் மீது மோதி, 20 மீட்டர் தூரம் அவரை இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைக்க செய்துள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ள சென்ற ராஜேந்திர குமார் குப்தா என்பவர் மீது ரிவர்ஸில் வந்த கார் மோதியது. இதில் முதியவர் கீழே விழுந்த நிலையில், மீண்டும் அவர் மீது கார் ஏறியது. முதியவரின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்