கணவனுக்காக விரதம் இருந்த மனைவி.. வீட்டிற்குள் நுழைந்த கணவன் செய்த பகீர்..- அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள்

Update: 2022-10-15 09:45 GMT

கணவனுக்காக விரதம் இருந்த மனைவி.. வீட்டிற்குள் நுழைந்த கணவன் செய்த பகீர்..

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் 

"கர்வா சவுத்" பண்டிகையை ஒட்டி கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி விரதம் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்ய முயன்ற கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

கோட்வாலி பகுதியில் உள்ள ஆசாத் நகரில் வசிக்கும் மோனி குப்தா தனது கணவனுக்காக விரதம் இருந்து கொண்டிருந்தார்.

அப்போது கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்த கணவன் மனோஜ், மோனியை சரமாரியாக பல முறை குத்தியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த மோனியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கு முன்னரும் மோனியை மனோஜ் பலமுறை தாக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்