நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2023-09-29 15:04 GMT

மருத்துவர் வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட 2 காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொல்லம் ரூரல் எஸ்பி அளித்த அறிக்கையின் அடிப்படையில் புயப்பள்ளி ஸ்டேஷன் ஏஎஸ்ஐ பேபி மோகன் மற்றும் மருத்துவமனை உதவி நிலைய ஏஎஸ்ஐ மணிலால் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வந்தனா தாஸ் தாக்கப்பட்டபோது அவரை காப்பாற்றாமல் போலீசார் தப்பியோடியதாகவும், இது காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்