"எலான் மஸ்க்கிற்கு கொடுக்கபட்ட பிரஷர்... பின்னணியில் மோடி, அமித்ஷா" - ரேவந்த் ரெட்டி பரபரப்பு பேச்சு

Update: 2024-05-09 08:23 GMT

பிரதமர் அலுவலகத்தின் நேரடி தலையீட்டால், தென் இந்திய மாநிலங்களில் முதலீடுகளை தடுக்க முயற்சி செய்யப்படுகிறது என ரேவந்த் ரெட்டி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த சூழலில் ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தெலங்கானாவில் முதலீடு செய்ய விரும்பியது, ஆனால் அந்நிறுவனம் குஜராத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபோல் பாக்ஸ்கான் நிறுவனமும் தெலங்கானாவை தவிர்க்க அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என பார்க்கிறார்கள் என விமர்சித்து இருக்கும் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா இந்தியாவில் இல்லையா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தென் இந்திய மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறார்கள் எனவும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்