"என்னை உயிரோடு புதைக்க திட்டம்.." பகீர் கிளப்பிய PM மோடி

Update: 2024-05-10 11:27 GMT

இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மராட்டிய மாநிலம் நந்தூர்பரில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, வளர்ச்சியில் தன்னோடு போட்டியிட முடியாத காங்கிரஸ் பொய் தொழிற்சாலையை திறந்து, வதந்திகளை பரப்புகிறது என குற்றம் சாட்டினார். ராமர் கோயில் கட்டுமானம் இந்தியாவின் சிந்தனைக்கு எதிரானது என காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகர் கூறுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்கிறது என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் போல் தான் ராயல் குடும்பத்திலிருந்து வரவில்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஏழை மகன் மக்களுக்கு சேவையாற்றுவதை ஜமீன் மனப்பான்மை கொண்டவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றார். தன்னை உயிரோடு புதைக்க வேண்டும் என சிவசேனா பேசுவதாகவும், மோடிக்கு சவக்குழி தோண்டப்படும் என காங்கிரஸ் பேசுவதாகவும் குறிப்பிட்டவர், அவர்களது வாக்கு வங்கியை தாஜா செய்ய இதுபோன்று பேசிவருகிறார்கள் எனவும் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்