பட்டியலின பெண்ணுக்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் தொல்லை

Update: 2023-08-17 11:52 GMT

உத்தரபிரேதசத்தில் முன்பகை காரணமாக பட்டியலின பெண்ணுக்கு 6 இளைஞர்கள் கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரேதசம் மாநிலம் ரசூலாபாத் அருகே தனது தாய், தந்தையுடன் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை ஆறு இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். கரும்பு தோட்டமான வயல் வெளிக்குள் வைத்து ஆறு இளைஞர்களும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்ணை சாதியின் பெயரில் ஆறு பேரும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதை இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்த நிலையில், மகளின் கதறல் சத்தம் அவரின் பெற்றோர் வந்த நிலையில், இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர்கள் ஆறு பேரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்