விவசாயிகள் குறித்து வரம்பு மீறி பேசி வாங்கி கட்டி கொண்ட கர்நாடக அமைச்சர்

Update: 2023-09-06 07:06 GMT

ஐந்து லட்சம் இழப்பீடு பெறுவதற்காகவே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹாவேரி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், 2015ஆம் ஆண்டுக்குபின் 5 லட்சம் ரூபாய் இழ்ப்பீடு அறிவித்த‌தில் இருந்து, தற்கொலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இழப்பீடு பெற முயல்வது மனித இயல்பு என்றும், ஏழை மக்கள் இதுபோன்று பணம் பெற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். 2020ஆம் ஆண்டு 500 பேரும், 2021ஆம் ஆண்டு 595 பேரும், 2022ஆம் ஆண்டு 651 பேரும், இந்த ஆண்டு இதுவரை 410 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர் பட்டியலிட்டார். எப்ஐஆர் பதிவு செய்தால்தான் உண்மையான தற்கொலைகள் தெரிய வரும் என்றும் அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு கர்நாடக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்