இந்தியா-கனடா விவகாரம்..ஒன்றும் செய்யாத கனடா அரசு..வெளியான அதிமுக்கிய தகவல் | India | Canada

Update: 2023-09-22 02:08 GMT

இந்தியா - கனடா இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், டெல்லியில் பத்திரிகையாளர்களை அரிந்தம் பக்சி சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஹர்ஜித் சிங் நிஜார் கொலையில் இந்திய ஏஜென்ட்களின் தொடர்பு குறித்த எந்த வித ஆதாரங்களையும் கனடா வழங்காததாக தெரிவித்தார். நிஜார் கொலை தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்த அவர், குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக விமர்சித்தார். கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த ஆதாரங்களை அளித்தும் கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார். மேலும் கனடாவில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்