தலைநகரை அலறவிட்ட மெயில் - திடீர் பரபரப்பு.. குவிக்கப்பட்ட போலீசார்

Update: 2024-05-23 06:10 GMT

தலைநகரை அலறவிட்ட மெயில் - திடீர் பரபரப்பு.. குவிக்கப்பட்ட போலீசார்

டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லிஉள்ள நார்த் பிளாக்கில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மற்றும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

அதேபோல் டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள தனியார் வணிகவளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்