"யாரும் தப்ப முடியாது" - டெல்லியை உலுக்கிய சம்பவத்தில் கொதிக்கும் கெஜ்ரிவால்

Update: 2024-05-26 09:22 GMT

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு துணை நிற்கிறோம் என்றும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் தப்ப முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின்கீழ் மருத்துவமனை உரிமையாளர் நவீன் சின்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்