பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் - பழங்குடியின அருங்காட்சியகம் திறப்பு

பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-11-15 09:24 GMT
பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார். பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அவரின் நினைவு அருங்காட்சியகத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மோடி,  பழங்குடியின மக்களின் பாரம்பரியம் மற்றும் வீரத்திற்கு அடையாளமாக ஆண்டுதோறும் நவம்பர் 15ம் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பழங்குடியின மக்களுக்கு என தனி அமைச்சகத்தை தோற்றுவித்ததாக கூறிய மோடி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த பழங்குடியின மக்கள்  என்றும் அருங்காட்சியகத்தில் நிலைத்து நிற்பார்கள் என்றார். விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை போற்றும் வகையில் கேரளா, குஜராத் உள்ளிட்ட9 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த அருங்காட்சியகங்கள்  மூலம் இந்திய கலாச்சாரம் மற்றும் கைவினை பொருட்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்