மைசூர் அரண்மனையில் தசரா நாடகம் - அரண்மனை வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள்

மைசூர் அரண்மனையில் தசரா வரலாறு குறித்த நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Update: 2021-10-08 08:03 GMT
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழாவின் 411ம் ஆண்டு விழா நேற்று துவங்கியது. கொரோனா பரவலால் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் 10.30 வரை மைசூர் அரண்மனையில் இளவரசர் யதுவீர் ராஜ தர்பார் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி வரை அரண்மனை வளாகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், மைசூர் தசரா உருவானதை விளக்கும் பாரம்பரிய நாடகம் நடைபெற்றது. தசரா திருவிழாவின் இறுதி தினமான 15ம் தேதி, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை, அபிமன்யு யானை, சுமந்து செல்ல உள்ளது.  இத்திருவிழாவால் மைசூர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ள நிலைஇய்ல், கொரோனா பரவலால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எளிமையாக விழாவைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்