பழங்கால பொருட்கள் என கூறி மோச​டி - மோன்சன் மாவுங்கல் மீது மேலும் ஒரு புகார்

பழங்கால பொருட்கள் விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு கைதான மோன்சன் மாவுங்கல் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

Update: 2021-10-04 09:17 GMT
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன் மாவுங்கல் என்பவர், பழங்கால பொருட்கள் வைத்திருப்பதாக கூறி அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வந்தார். அரிய பொருட்கள் என்பதால் இதனை அதிக விலை கொடுத்து வாங்க பிரபலங்கள் உட்பட பலரும் முன்வந்தனர். இதை வைத்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மோன்சன், கேரளாவில் ஒரு விஐபி போலவே வந்தார். இதனிடையே அவர் விற்ற பொருட்கள் அனைத்தும் போலி என தெரியவந்த நிலையில் மோன்சனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மோன்சனின் பங்குதாரரான சரத் என்பவர் துன்புறுத்தி வந்ததாகவும் அது தொடர்பான புகாரை திரும்பப் பெறுமாறு மோன்சன் தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் மோன்சன் மீது வழக்குப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்