பட்டாசு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிருப்தி

அரசியல், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக அளவில் பட்டாசுகள், வெடிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Update: 2021-09-28 12:00 GMT
பேரியத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும் அவற்றைக் கொண்டு 300 வகையான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யுமாறு கடந்த 2020, மார்ச் 3-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் குறித்து மும்பை, கொல்கத்தா மாநகரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும்,  இவற்றை தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாகவும்,  மனுதாரர் அர்ஜுன் கோபால் தரப்பு வாதிட்டது. பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்ந்து மறைமுகமாக பேரியத்தை அனுமதித்து பட்டாசு உற்பத்தியை,மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும், மனுதாரர் அர்ஜுன் கோபால் தரப்பு மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் வாதிட்டார். ஒவ்வொரு நாளும் மத நிகழ்வுகள், அரசியல், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி  அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதை தடுக்காமல் இருக்கும் காவல் ஆணையரை பொறுப்பாக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். மேலும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை நாளைய தினத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்