ஃபோர்டு உற்பத்தி ஆலை மூடல்? 4,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

Update: 2021-09-10 11:09 GMT
கடந்த 1991 ஆம் ஆண்டு, இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்த ஃபோர்டு நிறுவனம், கார் பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது... கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 14 ஆயிரத்து 690 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தங்களின் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளது, ஃபோர்டு நிறுவனம். இதன் காரணமாக, இந்தியாவில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளை மூட இருப்பது ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், இந்தியாவில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை அமல்படுத்த ஓராண்டு காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்