போதைப் பொருள் வழக்கு - நடிகர் ராணா நேரில் ஆஜர்

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ராணாவிற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ராணா அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

Update: 2021-09-08 11:01 GMT
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ராணாவிற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ராணா அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் புழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு,12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான், ரகுல் பிரீத் சிங் உள்பட 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நடிகர் ராணா இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதில் இவர்கள் எல்லோரும் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்